நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன இரண்டு நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 09 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களும் திறக்கப்படும் என அறிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மொத்த வர்த்தக செயற்பாடுகளுக்காவே இவ்வாறு திறக்கப்படவுள்ளன என்றார்.