பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் ஏற்கனவே சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இவ்வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.