நாட்டை மூடுவதினால் கொரோனா தொற்று அல்லது இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நடப்பது மக்களின் உயர்ந்த பொறுப்பாகும் என்று அதன் நிர்வாக உறுப்பினர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முடக்குவதும் மற்றும் பயணங்களை கட்டுப்படுத்துவதும் இரு வேறு விடயங்கள் எனவும் முடகப்பட்ட போது பயணத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் முடக்கம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முடக்கப்படுவதன் மூலம் பயணங்கள் குறைந்தது 90% இற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஊரடங்கு சில பகுதிகளில் சரியாக பேணப்பட்டாலும், ஒரு சில இடங்களில் சரியாக பேணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)