மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்தவாரமளவில் பெற்றோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என தெரியவருகிறது.

கடந்த ஜூன் 11ம் திகதியே இறுதியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. எனினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஓகஸ்ட் 31ம் திகதியில் இருந்து 70 பில்லியன் டொலர் நட்டமாகி வருவதாக சுட்டிக்கட்டப்படுகிறது.

டொலர் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கூறி அரசாங்கம் விரைவில் எரிபொருள் விலையை உயர்த்தும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை பஸில் ராஜபக்ஸ (Basil Rajapaksa) அமைச்சராக நியமிக்கப்பட்டால் எரிபொருள் விலை குறையும் என ஆளும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்க்ள மற்றும் எம்.பிக்கள் சிலர் கூறியிருந்தனர். ஆனால் அவர் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் விலை உயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.