கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை, பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (24) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயரு 65ஆகும்.
அன்னாரது மறைவுக்கு, அரசியல் கட்சி பேதங்களின்றி, இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.