![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYCw7b8LeAII_K7FQDfN5PqM4MphZYTgZwPqlckRGcLofoo7p86gHm_ZGodtezJ7FKFdc766jG1yavtFfIh1X33ft3IW_05Iw_V0Ezmgtk-levBIDrOcGn0Gznfe6Itgi9kPhg8cQuX8j8/s16000/1E35E080-C2FA-4B19-BF12-D0E0D21C3B80.jpeg)
தற்போதைய கொரோனா பரவல் நிலை எதிர்வரும் வாரங்களில் மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களின் நெரிசல் காரணமாக ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல பயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனைகளில் தற்போது போதுமான ஒட்சிசன் இருந்தாலும், ஒட்சிசன் பற்றாக்குறை காரணத்தினால் சுமார் ஒரு வாரத்தில் பலர் இறந்துவிட வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுப் போக்குவரத்தை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மோசமடையலாம் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி செய்தித்தாளிடம் தெரிவித்தார்,
தொற்றுநோயால் மருத்துவமனை ஊழியர்களும் பாதிப்படைவதன் காரணமாக மருத்துவமனைகளின் நிலைமை மோசமாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)