ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தின் வடமேற்கில் இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ் கோரோசான் பயங்கரவாத பிரிவு கடந்த 26ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 169 ஆப்கானிய மக்களும் 13 அமெரிக்க படை வீரர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.