நாடு முழுவதிலும் இன்று (20) இரவு 10.00 மணி தொடக்கம் 30ஆம் திகதிவரை பொது முடக்கம் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று பகல் நடந்த சந்திப்பொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதுபற்றி காமினி லொக்குகே அமைச்சர் தெரிவித்தபோது, நாடு முடக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.