ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மேலதிக வரி விதிப்பதன் மூலம் அரசாங்கம் இ-காமர்ஸ் தளங்களுக்கான வரிகளை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கும் வதந்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நிராகரித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இது ஒரு பொய்யான வதந்தி மாத்திரமே. உண்மையில், இலங்கை தனது ஈ-காமர்ஸ் தளங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றை முத்திரையை பதிக்க வழிவகை செய்வதாகவும், அனைத்து உதவிகளையும் வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
அதன்படி, வெளிநாட்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட முந்தைய 2% கூடுதல் கட்டணம் 6.5% முதல் 7% வரை அதிகரித்ததன் விளைவாக பல தனியார் வங்கிகள் மேற்கொண்ட நகர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, இது அரசாங்கக் கொள்கை அல்ல இது தனியார் வங்கிகளினால் எடுக்கப்பட்ட ஒரு நகர்வு என்று அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.