கொரோனா தொற்று அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துச் செல்வதை அடுத்து சுகாதார தரப்பினர் மற்றும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மத தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், பொது மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவும், அதற்காக தான் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை முழுமையாக மூடும் வகையில், முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவார்களாயின், நாடு முழுவதையும் பாதுகாப்பது சிரமமானது கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.