இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையின் போது உயர் அதிகாரிகள் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நாளாந்தம் கொரோனா இறப்புக்கள் 200 ஐ நெருங்கியுள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளமை பெரும் நெருக்கடியாக உருவாகியிருக்கிறது.
இந்தநிலையில், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹணவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாது இந்த மாதத்தில் மட்டும்ம் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அதேபோன்று, இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.