சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரும் வழியில் சந்தேகநபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
மதுகம யடதெல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யடதெல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரிக்கப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பொலிஸார் சந்தேநபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபரை முச்சக்கர வண்டியில் வைத்துப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரும்போது, திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்திருந்த சமயத்துல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸ் நிலையம் நோக்கி சந்தேகநபரை கைது செய்து அழைத்த வரும் போது, அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரை வேன்தேவ வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.