சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தனது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் நிதிக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு தனது ஓகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.