கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது சாரதியிடம் இருந்து தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் சிறந்த வகை முகக்கவசம் அணிந்ததாகவும், அதை தனது உத்தியோகபூர்வ காரில் மட்டுமே அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் சிறந்த வகை முகக்கவசம் அணிந்ததாகவும், அதை தனது உத்தியோகபூர்வ காரில் மட்டுமே அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறியதாவது,
"பாராளுமன்ற உறுப்பினராகிய நான், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசரநிலை காரணமாக எனது கடமைகளில் இருந்து விடுபட முடியாது, மேலும் நான் அனைவரின் பாதுகாப்பிற்காக ஸூம் தொழில்நுட்பம் மூலம் எனது கடமைகளை இன்று செய்தேன்.என்னுடன் கடந்த சில நாட்களாக நெருக்கமாக கடமையாற்றி வந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும், தங்கள் கடமைகளை ஆன்லைனில் எளிதாகச் செய்யவும் அறிவுறுத்துகிறேன், ஏனெனில் கடமையிலிருந்து வெளியேறும் ஓரிரு தருணங்களினால் ஒட்டுமொத்த மக்களுக்கும் கஷ்டப்படுவார்கள். மேலும், என் பொறுப்பை பாதுகாப்பாக நிறைவேற்றுவேன்.மேலும், நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரே ஆலோசனை என்னவென்றால், நீங்கள் ஒருபோதும் முகக்கவசத்தை அகற்றக்கூடாது. ஏனென்றால், நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட “ரெஸ்பிரோன் நனோ ஏவி 99” எனும் முகக்கவசத்தை தான் நீண்ட காலமாக அணிந்திருந்த காரணத்தினால், கொரோனா தொற்று இனங்காணப்பட்ட பலரிடம் பழகிய போது ஆரோக்கியமாக இருந்த பல நிகழ்வுகள் உள்ளன.ஆனால் எனது உத்தியோகபூர்வ காரில் நான் முகக்கவசத்தை அகற்றினேன். நான் முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற போது எனக்கு தொற்று ஏற்பட்டதாக நான் நம்புகிறேன், அச்சமயம் வாகன சாரதி மட்டுமே இருந்தார், அப்போது அவர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை எனக்கு தெரியாது.எனவே ஒரு கணம் கூட உங்களை பாதுகாக்கும் முகமூக்கவசத்தினை அகற்றாதீர்கள்.”
(யாழ் நியூஸ்)