கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்படுகிறதா? மரண வீதம் முஸ்லிம்கள் அதிகரிக்க காரணம் என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்படுகிறதா? மரண வீதம் முஸ்லிம்கள் அதிகரிக்க காரணம் என்ன?

இன்று அதிகமான மீடியாக்களை பொருத்தவரையில் கொரோனாவை பரப்புவதில் முஸ்லிம்கள் முன்னணியில் நிற்கின்றனர் என்றும், அதற்குச் சான்றாக மரணிக்கும் மொத்த மரண விகிதத்தில், முஸ்லிம்கள் அதிகரித்திருப்பதையும் முன்வைக்கின்றனர்.

இவ்வாறான முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டும் ஒரு குற்றச்சாட்டு, இன்று பக்கச்சார்பான சில மீடியாக்களால் பரப்பப்பட்ட போதிலும், இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்தில் இருந்து இதற்கான சரியான பதில் இவர்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கின்றது.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது கொரோனா சிகிச்சைக்கு பொறுப்பான வைத்தியர் ஹம்தானி அவர்களிடம் மீடியாவில் கேட்கப்பட்ட கேள்விக்குக்கூட ஒரு சரியான பதிலை அவர் வழங்கவில்லை.

உண்மையில் இதற்கான பதிலை நமது தலைமைகள், இதற்கு பொறுப்பாளர்களர்கள், முக்கியஸ்தர்கள், ஏனைய சமூக மக்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும்.

உண்மையில் இதில் நடப்பது என்ன

1. முஸ்லிம் சமூகம் இங்கையில் 80 வீதம் வியாபார சமூகமாகவே காணப்படுகின்றது. இதனால் மக்களுடனான தொடர்பு இவர்களுக்கு அதிகமாகவே காணப்படுகின்றது. அங்காடி வியாபாரிகள் உட்பட , காலையில் வியாபார நோக்கத்திற்காக வெளியே செல்லும் ஒரு முஸ்லிம் நபர் மாலை மாலை வரையில் பலதரப்பட்ட, பல்வேறுபட்ட, மக்களுடன் தொடர்பு பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு நோய் தொற்றுக்கான சந்தர்ப்பம் ஏனைய சமூகத்தினரை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

2. கொழும்பு போன்ற பகுதிகளில் உற்பட அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் முச்சக்கர வண்டி போன்றவற்றை தொழிலாகக் கொண்டிருப்பதால் இவ்வழி யாலும் அதிகமான வர்களுக்கு தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

3. முஸ்லிம் மக்கள் ஏனைய சமூக மக்களை போல் வாரம் ஒரு முறை போல் அல்லாது, பள்ளிவாசல்கள் போன்ற சமூக தொடர்புடைய பொது இடங்களுன் ஐவேலையும் அதிக தொடர்புடன் காணப்படுவதால் முஸ்லிம்களுக்கு நோய் தொற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

4. முஸ்லிம் மக்கள் அதிகமாக கூட்டுக்குடும்பமாகவும், ஒரு வீட்டில் பல குடும்பங்களாக வாழ்வதாலும் நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்பு இதிலும் காணப்படுகின்றது.

5. எனைய சமூக குடும்ப அமைப்பை பொறுத்தவரையில் மாதம் ஒரு முறை, அல்லது வருடம் ஒரு முறை சந்தித்துக் கொள்பவர்களாகவும், முஸ்லிம் குடும்ப அமைப்பை பொறுத்தவரையில் அண்ணன் தம்பி , அக்கா தங்கை மாமான் மச்சன் என்ற வகையில் தினமும் சந்திப்பவர்களாகவே காணப்படுகின்றனர்.

6. முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழ்வதால் கொழும்பு போன்ற பிரதேசங்கள் உட்பட ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம் கிராமங்களை நோக்கும் போது செறிவாகவும் அயலவர்கள், சொந்தக்காரர்கள், குடும்பங்கள் என நெருங்கி வாழ்வதால், இவர்களுக்கான தோற்று அதிகமாக ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

7. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் வயது வந்த பெற்றோர்கள், வயோதிபர் நிலையங்கள் அல்லாது, தம்மோடு வீட்டில் இருப்பதால் கூடுதலான முஸ்லிம் வயோதிபர்கள் கொரோனாவல் மரணிப்பதற்கான காரணம்மும் அதிகமாக காணப்படுகின்றது.

8. முஸ்லிம்கள் பொது பொதுப்பணிகள் என்ற வகையில் அதிகமாக ஈடுபடுதல், பக்கத்து வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் போது அவர்களால் அதற்காக செல்ல முடியாத பட்சத்தில் அதற்காக உறவினர்கள், அயலவர்கள் என்ன அக்கடமைகளை நிறைவேற்ற பொறுப்புக்களை எடுப்பதனாலும் தொற்றுக்கள் அதிகமான இடங்களில் காணமுடிகின்றது. உதாரணமாக கடந்த காலங்களில் கஷ்டமான மக்களுக்கு பொருட்களை விநியோகித்த இலைஞர்கள் பலர் தொற்றுக்கு இலக்காகி பலியானது குறிப்பிடத் தக்கது.

9. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் உணவுப் பழக்க வழக்கத்தில், இலங்கையில் வாழும் ஏனை சமூகத்தினரை விட, கொழுப்பு, என்னை போன்றவை கூடுதலாக பாவனையில் இருப்பதால், கூடுதலாக சர்க்கரை வியாதி, இருதய வியாதி உடையவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே கூடுதலான மரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

10. அடுத்து மிக முக்கியமா காணம். 80% துக்கூம் மேலாக வியாபாரிகளாக காணப்படுவதால் , நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் வாரம் ஒரு முறையாவது புறக்கோட்டை, மற்றும் தலை நகரின் ஏனைய பகுதிகளை நாடக் கூடியவர்களாகவும் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் சந்தித்துக் கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு இடையிலான தொற்றுப் பரவலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக காணப்படுகின்றது.

எனவே அதிகாமான முஸ்லிம்களின் தொற்றுக்கு

உண்மையான காரணம் என்ன ?

கூடுதலான உயிர் சேதத்திற்கு காரணம் என்ன ?

இது போன்ற

இயற்கை காரணிகளை ஆராயாமல் இவற்றிற்கான சரியான பதிலை கொடுப்பது தவறானதாகும்.

இதன் நடைமுறை தாக்கத்தை நாம் சிந்திக்கும் போது இயற்கையாகவே முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகத்தினருடனும் ஒரு பரந்தளவிலான தொடர்பை உடையவர்களாக காணப்படுகின்றனர்.

அடுத்து அனைத்துக்கும் முக்கியமான ஒரு காரணமாக அமைவது மேற்கூறிய காரணங்களின் படி, நாம் விரும்பியோ விரும்பாமலோ இயற்கையாகவே முஸ்லிம் சமூகத்தினுள் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

அதைவிட அரசாங்கம் இதற்கான தடுப்பூசியை காலதாமதத்தின் பின்னே இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்த ஆரம்பித்தது.

அரசு இதை தொடங்கும் போதே நியாயமான அளவு மக்கள் மத்தியில் தொற்று பரவி விட்டது. எனவே முஸ்லிம்கள் மத்தியில் தொற்று அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

எனவே இதுபோன்ற சாத்தியமான காரணங்களை ஆராயாமல், முஸ்லிம் சமூகத்தின் மீது பழி சுமத்துவது தவறாகும்.

ஏனைய சமூகங்களுக்கு இது போன்ற பூரணமான தெளிவை எமது சமூகத்தின் முக்கியஸ்தர்கள், இதுதொடர்பான பொறுப்புதாரிகள், இன்னும் சரியாக எடுத்துக் கூறவில்லை என்பதே உண்மையாகும்.

சில தினங்களுக்கு முன்பும் முஸ்லிம் அரசியல்வாதி ஒரு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் பின்வாங்குகின்றனர் என்றும் அதனால் அதிகமாக தொற்றுக்குள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எனவே இது சம்பந்தமாக ஏனைய சமூகங்களுக்கு விளக்கம் கொடுப்பவர்கள் போதிய தெளிவுடன் விளக்கம் கொடுப்பது சிறந்ததாகும்.

(பேருவளை ஹில்மி) 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.