இதன்படி, அஜித் ரோஹண தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு, உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம், அஜித் ரோஹணவுடையது கிடையாது என பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம், டிக்டொக் சமூக வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அஜித் ரோஹண அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதுடன், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.