சர்வதேச நாணய நிதியம் அதன் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்த 650 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, இலங்கையும் உரிய தொகையிலிருந்து 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ் லீனா ஜார்ஜீவா அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகளின் நிதி நெருக்கடிக்கு இதன் மூலம் வலுவான தீர்வை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், குறித்த கொடுப்பனவிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்திற்குள், இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ இருப்புக்கள் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.