சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து கோவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.
இதனை https://covid-19.health.gov.lk/certificate/ என்ற இணையதள முகவரியில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் தற்போது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)