தடுப்பு ஊசி ஏற்றும் விடயத்தில் முஸ்லிம் சமூகமும் ஆர்வம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எதுவித விஞ்ஞான அடிப்படையும் இன்றி போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (24) கலந்துகொண்ட நீதி அமைச்சர், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களில் 63 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
இது நாட்டில் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.