கொரோனா தொற்றின் போது நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் நாட்டின் பாதி பேர் இன்று இறந்திருப்பார்கள் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், எதிர்க்கட்சியானது ஆட்சியில் இருந்தபோது அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் அப்படிப்பட்டவர்கள் இன்று கொரோனா பற்றி பேசுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கொரோனாவால் உதவியற்ற மக்களின் கண்ணீரின் மூலம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
முந்தைய நல்லாட்சி அரசாங்கம் இப்போது இருந்திருந்தால், நாடு ஒரு பெரிய மயானமாக மாறியிருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.