தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரங்களும் பொலிஸாரினால் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்கள் தங்களது அடையாள அட்டை அல்லது நிறுவன பிரதானிகளால் வழங்கப்படும் கடிதங்களை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ற காவல்துறையினரிடம் காண்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.