சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைய இலங்கையர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, குடியுரிமை மற்றும் வேலை விசா உள்ள இலங்கையர்கள் மட்டுமே நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கையை தவிர, இந்தியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதேவேளை, இலங்கை மற்றும் துபாய் இடையே எத்திஹாட் ஏர்லைன்ஸ் இன்று முதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அனைத்து பயணிகளும் கோவிட் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்று எத்திஹாட் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலதிக தகவலுக்கு... https://colombogazette.com/2021/08/22/uae-to-approve-tourist-visas-for-sri-lankan-passport-holders/