தம்பானே ஆதிவாசி தலைவர் ஊருவாரிகே வன்னில அத்தோவின் மனைவி மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கண்டறியப்பட்டதால் மஹியங்கனை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
ஆதிவாசிகளின் கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட விரைவான அன்டிஜென் பரிசோதனையின் போது பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அப்பகுதியில் கடந்த 27 ஆம் திகதி 115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், 44 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.