மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொட்ட நௌபர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவர் சிறுநீரக நோய்க்கான பரிசோதனைக்காக கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு அவருக்கு ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை ஆணையர் (நிர்வாகம் மற்றும் மறுவாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வெலிக்கடை சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் இன்று உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2004 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் பொட்ட நௌபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.