இலங்கையில் தற்போதைய இறப்பு மற்றும் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 நபர்கள் வரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகம் சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று (12) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல், மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல், அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல், பொதுக் கூட்டங்களைத் தடுப்பது, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல், பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள், தொற்றாளர்கள் மற்றும் மரண அறிக்கையை சரிவர தெரிவித்தல் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிந்துரைத்தல் போன்றவைகள் பரிந்துரைக்கப்பட்டன.
இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களான டாக்டர் பாலித அபேகோன், நிஹால் அபேசிங்க, ராஜீவ் டி சில்வா, லக்குமார பெர்னாண்டோ, பத்மா குணரத்ன மற்றும் ஆனந்த விஜேவிக்ரமா ஆகியோர் அடங்குவர். பேராசிரியர்கள் அசித டி சில்வா, ரஜீவ் டி சில்வா, சரோஜ் ஜெயசிங்க, இந்திக கருணாதிலக, நீலிகா மாளவிகே, காமினி மெண்டிஸ், மலிக் பீரிஸ் மற்றும் மஞ்சு வீரசிங்க ஆகியோரும் இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் இணைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)