சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக 2019 ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து அறிக்கையொன்றை பதிவு செய்ய இன்று (23) குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.
ஷெஹான் மாலக கடந்த சில வாரங்களாக ஈஸ்டர் தாக்குதல் மீதான விசாரணைகள் குறித்து வெளிப்படையாக பேசினார், இது ஒரு அரசியல் சதி என்று கூறியதோடு, அதனை விசாரிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் முன்மொழியப்பட்ட கருப்பு கொடி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதில் சமூக ஆர்வலர் முக்கிய பங்கு வகித்தார்.
பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்ட ஷெஹான் மாலக, இன்று மாலை வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறினார். (யாழ் நியூஸ்)