தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4.00 வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், நெடுஞ்சாலை மற்றும் சாலை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.