தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா என்பது தொடர்பான முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவையின் பிரதிப் பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.