லங்கா இ நியூஸ் இணையத்தளத்திற்கு கட்டுரைகளை வழங்கிய நபர் ஒருவரை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
நாளை இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அவர் எழுதிய கட்டுரையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை விசாரிக்க இந்திய தூதரக அதிகாரி பொலிஸில் அளித்த புகாரை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர் நபர் விமானப்படை அதிகாரி என்றும், அவர் இராணுவத்திலிருந்து பணி நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)