அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் தடுப்பு நிதியத்துக்கு நன்கொடையாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு ஆளும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும் மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.