இராஜாங்க அமைச்சர் ஜனக வாக்கும்புரவுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாதத்துக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8 ஆவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
அவரது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்ட பின்னர், அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சர் இன்று கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டார்.