நாட்டில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளுக்கு 47 கிலோகிராம் கொண்ட ஒட்சிசன் கொண்ட சிலிண்டர் ரூ. 150,000 இற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய விற்பனை சட்டவிரோதமானது என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவிக்கின்றது.
தற்போது இதுபோன்ற சிலிண்டர்கள் நாட்டில் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 80,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒட்சிசன் தேவை அதிகரித்து வருவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக சமூக ஊடகங்களில் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதிவு செய்யப்படாத எவருக்கும் ஒட்சிசனை விற்க நாட்டில் சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்று ஆணையம் கூறுகிறது. (யாழ் நியூஸ்)