நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு நாடு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கும் குறைவாக நாட்டை மூடுவதால் எந்த விளைவும் இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் கொரோனாவின் பரவல் இன்று ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஒவ்வொரு கிராமத்திலும் கொரோனா மரணம் ஒன்று ஏற்பட்ட கிராமம் என கேட்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் நாடு மிக அச்ச நிலையில் இருப்பதாகவும், ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு அதிக இறப்பு விகிதம் இலங்கையில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்று நடக்கும் கொரோனா இறப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு என்றும், சரியான நேரத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)