ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான வரி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் காலாவதியான வாகன வருமான வரிப்பத்திரத்தினை புதுப்பிக்கும்போது போது, அதற்கான அபராதம் அறவிடப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.