கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அல்லது அவர்களின் நிலைமைகளின் அடிப்படையில் வீட்டிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய செயல்முறை இன்று முதல் மேல் மாகாணத்தில் துவங்கப்படும் என்று அரசாங்க தகவல் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் 1904 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நோயாளிகள் சுவாசக் கஷ்டம் (A), காய்ச்சல் (B) மற்றும் அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் (C) நோயாளிகள் என வகைப்படுத்தப்படுவார்கள்.
இந்த புதிய செயல்முறை இன்று முதல் அமல்படுத்தப்படும் மற்றும் SMS மற்றும் தொலைபேசி சேவைகளின் அடிப்படையில் அமையும்.

SMS அனுப்ப வேண்டிய முறையானது,
நோயாளிகளின் வகை (A,B,C) {SPACE} வயது {SPACE} தேசிய அடையாள அட்டை எண் {SPACE} முகவரி
உதாரணம்:
(A 71 503458493V இலக்கம் 05, கண்டி வீதி, திகன)
இவ்வாறு அனுப்பப்பட்ட SMS உரிய சுகாதர அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன், 247 என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாக குறித்த நோயாளியினை சுகாதார அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள்.
வீட்டில் தனிமைப்படுத்தப்படக் கூடியவர்கள் 1390 என்ற இலகக்தினூடாக தொடர்பு செய்யப்படுவார்கள். (யாழ் நியூஸ்)