கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் தினமும் 5-7 நபர்கள் கொரோனா தொற்றினால் இறப்பதாக அதன் பணிப்பாளர் டாக்டர் சாகரி கிரிவம்தெனிய தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை வீட்டிற்கு அனுப்ப கடந்த வாரம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவசர நிலை காரணமாக மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டாலும், அவசர அறுவை சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படுக்ம் என்று தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 24% நோயாளிகளுக்கு ஒட்சிசன் தேவைப்படுவதாகவும், மருத்துவமனையின் 34 வார்டுகளில், ஆறு வார்டுகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)