கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அதிக நேரம் தேவை என்று கருதியதாலேயே சட்டமூலம் இவ்வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என அவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் விவாதத்திக்கப்படும் திகதி குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.