30 வயதிற்கு மேற்பட்ட 43 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விஷேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 98 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டை சிக்கலுக்கு தள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.