நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்குவது, அதிக விலைக்கு விற்பது அல்லது பதுக்கி வைப்பது குறித்த அவசரகால விதிமுறைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான ஜனாதிபதி, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை அத்தியாவசிய சேவை ஆணையராக நியமித்துள்ளார். (யாழ் நியூஸ்)