அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பெறுவதில் கடினப்படும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்றும், உலக உணவு பற்றாக்குறை இருந்த போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது 'அபி வவமு ரட நகமு' போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்ட போதிலும், இன்று மக்கள் பட்டினியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் குறித்து கலந்துரையாட கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மட்டும் தான் அழைத்திருப்பதாகவும், அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
அக்மீமன பிரதேசத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)