நாட்டில் மேலும் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 426,169 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றையதினம் 3,698 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று 4,612 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, மேலும் 192 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,775 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.