முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரிஷாட் பதியூதீனின் மாமனாராகிய அலி இப்ரஹிம் சாய்பு கிதர் மொஹமட் சிஹாப்தீன், ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய 16 வயதான சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றின் கவனத்துக்கு இன்று (27) கொண்டுவரப்பட்டதுடன் பிணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை காரணமாக கொண்டு, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது எனத் தெரிவித்து பிணை மனுக் கோரிக்கையை மேலதிக நீதவான் நிராகரித்துவிட்டார்.
அத்துடன், சந்தேகநபருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறைச்சாலை திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.