ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரியான சந்தர்ப்பத்தில தனித்து போட்டியிட்டு எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிய அதிகார சபை கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் (மொட்டு சின்னம்) கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் மக்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தரையில் விழுந்த எமது கட்சி தனது அமைப்புகளை வலுப்படுத்தியவுடன் மீண்டும் களத்திற்கு வருவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)