நாட்டில் இன்று இலட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொரோனா இறப்பு புள்ளிவிவரங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூட கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்த இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை வெளியிடுவது வருங்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)