அத்தியாவசிய சேவைகள் துறையின் ஏழு பிரிவுகளின் ஊழியர்களுக்கு மட்டுமே மாகாண எல்லைகள் கடக்க அனுமதியளிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்..
மேலும் இந்த கொரோனா குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கீழ் காணும் அத்தியாவசிய சேவைகளின் ஏழு துறையினருக்கே மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படும்:
1. சுகாதார சேவைகள்
2. காவல்துறை மற்றும் முப்படைகள்
3. அத்தியாவசிய அதிகாரப்பூர்வ அரச துறை அதிகாரிகள்
4. அத்தியாவசிய பொருட்களின் விநியோகஸ்தர்கள்
5. அத்தியாவசிய சேவைகளை வழங்குநர்கள் - பயன்பாட்டு சேவைகள் போன்றவை
6. நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம் (ஆதாரம் தேவை)
6. துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் இருந்து சரக்கு எடுத்து செல்லல் மற்றும் வருகை (ஆதாரம் தேவை)
தனிமைப்படுத்தலில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அத்தியாவசிய சேவைத் தொழிலாளர்கள்
அங்கிருந்து உடல்ரீதியாக வேலைக்கு செல்வதை இருந்து கட்டாயம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அனுமதிக்கப்படாது.