சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை பதவியில் இருந்து நீக்கும் நோக்கிலேயே அரசாங்கம் திடீர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தெரிவித்துள்ளது.
கொரோனா ஒடுக்கும் செயல்முறையின் தோல்வியைக் காரணம் காட்டி சுகாதார அமைச்சர் நீக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி பணித் தளபதி அல்லது புலனாய்வு தலைவர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்,
கொரோனா தொற்றுநோயை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு சுகாதார அமைச்சை வழங்குவது ஒருபுறம் நகைச்சுவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா அலை வந்தபோது, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் உயர் அதிகாரிகளை அரசு நீக்கியதாகவம் அவர் குற்றம் சாட்டினார்.
இன்று 6000 கொரானா இறப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளபோதிலும், கொரோனா தொடர்பாக முடிவுகளை எடுக்கும் பணிக்குழுவின் தலைவர்கள் தங்கள் பதவியை நன்றாக தக்க வைத்திருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)