1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டாட்சி அமைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்கு பதிலாக 1972 ஆம் ஆண்டு புதியதோர் அரசியல் அமைப்பினை உருவாக்கி பிரகடனப்படுத்தியது.
இந்த அரசியலமைப்பு இலங்கையின் குடியரசு அரசியலமைப்பு என அழைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் 1978 காலப்பகுதி முதற்கட்டம் வரை இன்றைய பாராளுமன்றம், அன்றைய சட்டவாக்கத்துறைக்கான தேசிய அரசுப் பேரவை என்ன அழைக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு வரை இலங்கையில் அரசியலில் தேசியப்பட்டியல் முறை காணப்படவில்லை.
அதை தொடர்ந்து 1977ஆம் ஆண்டு தேர்தலி்ல் மொத்த 166 ஆசனத்தில் 140 ஆசனங்களை பெற்று 6/5 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற J R ஜெயவர்தனா தலைமையிலான அரசாங்கம் 1978 ஆம் ஆண்டு சர்வாதிகார போக்கில் ஆன நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் யாப்பு முறை ஒன்றை அறிமுகம் செய்தது.
இதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறப்பான அம்சமே தேசியப்பட்டியல் முறையாகும்.
அதாவது நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அறிவாளிகள், கல்வி அறிவைப் பெறுவதற்காக அதிக காலத்தை செலவு செய்த, ஆனால் அரசியல் பின்னணி அரசியல் அனுபவம் இல்லாத, தேர்தல் ஒன்றின் போது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அடிப்படைச் செல்வாக்கு இல்லாத, பொருளாதார அறிவியலில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள், கல்விமான்கள், மற்றும் பல்துறைகளில் அறிவுகளை பெற்ற சிறப்புத் தேர்ச்சி உள்ளவர்கள், நாட்டின் தேசிய வருமானத்திற்கு பாறிய பங்காற்றும் தேசிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் உயர் பிரஜைகள், நாட்டில் அவ்வப்போது சட்ட ஆலேசனைகளை பெற்றுக் கொள்ள தேவைப்படும் சட்ட வல்லுனர்கள், போன்றவர்களின் அறிவையும் அனுபவத்தையும் நாட்டிற்கு பெற்றுக் கொள்ளும் வகையில், அவர்களுக்கான பாரளுமன்ற வாய்ப்பினை வழங்கி, அதன் மூலம் அவர்களுடைய அறிவின் பயனை நாடும், நாட்டு மக்களும் அடையச் செய்வதற்காகவே தேசியப் பட்டியல் இலங்கை அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசியப்பட்டியலை அறிமுகம் செய்த நாடுகள், தமது தேசியப் பட்டியல் முறையி்ல் முன்னேற்றகரமான வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது தேசிய பட்டியல் ஒரு மூடிய தேசியப்பட்டியலாக, தேர்தல் காலத்திற்கு முன்பே தமது தேசிய பட்டியலை புரணப்படுத்த வேண்டும். இது மூடிய தேசியப்பட்டியல் முறை எனக் கூறப்படுகிறது. தேர்தலின் முன் பட்டியலில் இல்லாத புதிய நபரை தேசிய பட்டியலில் நியமிக்க முடியாது.
அரசியல் கட்சிகள் தமது தேசிய பட்டியலை தேர்தலுக்கு முன் மக்கள் மததியில் சமர்பிக்க வேண்டும். சில நாடுகளில் குற்றம், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்பவர்கள், நீதி மன்றங்களால் தண்டிக்கப்படவர்கள் தேசிய பட்டியளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறான
வர்களின் பெயர்கள் கட்சிகளால் முன்வைக்ப்படும் பட்சத்தில் மக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாய்யு,வழக்கு தொடரும் வாய்ப்பு, அதாவது நாட்டின் ஆட்சி முறையில் தவரானவர்கள் நுழையக் கூடாது என்பதற்காக இவ்வாறான வழி முறைகள் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம் முறையானது ஜெர்மன், இத்தாலி, உற்பட பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு, இவ்வாறான உயர் பிரஜைகளின் உச்ச பயன் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தழுவியதாகவே இலங்கையில் தேசியப்பட்டியல் முறை அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டது.
ஆனால் இலங்கையில் இது திறந்த தேசிய பட்டியல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி இன்று இலங்கையி்ல், தலை கீழாக, தமது தேர்தலுக்கு செலவு செய்தவர்கள், குடும்ப அங்கத்தவர்கள், ஆட்சி அமைக்க பேரம் பேசும் அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள். பேரம் பேசும் இடைத் தரகர்கள், அரசியல் கட்சிகளின் சட்ட விரோத வேலைகளை செய்யும் சட்ட விரோதிகள், தேர்தலில் தோல்வியுற்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், தலை மீறிய சட்டவிரோத செயல்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்கள் போன்றோரின் பாரளுமன்ற நுழைவுக்காக பயன்படுத்த படுகிறது. இதுவே இன்றைய இலங்கையின் அரசியல் தேசியப்பட்டியளிற்கு கொடுக்கும் முதலிடமாகும்.

( பேருவளை ஹில்மி )