நாட்டில் டொலர் தட்டுப்பாடு - ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் கடன் திட்டத்தில் எரிபொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் டொலர் தட்டுப்பாடு - ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் கடன் திட்டத்தில் எரிபொருள்!

நீண்ட கால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவது குறித்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தலைமைப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

உதய கம்மன்பிலவின் சமூக ஊடக கணக்குகள் இலங்கை எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த முன்மொழிவு செய்யப்பட்டதாகக் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சருடன் அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். (யாழ் நியூஸ்)

බලශක්ති අමාත්‍ය නීතිඥ උදය ගම්මන්පිල මහතා සහ ශ්‍රී ලංකාවේ එක්සත් අරාබි එමීර් රාජ්‍ය තානාපති කාර්යාලයේ වැඩ බලන ප්‍රධානී ...

Posted by Udaya Prabhath Gammanpila on Monday, August 23, 2021

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.