முன்னாள் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு அனுப்பியுள்ளது.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடன் ஒரு யூடியூப் நேர்காணலின் போது அவர் கூறிய பல கருத்துக்களுக்காக அவர் இவ்வாறு வரவழைக்கப்படவுள்ளார்.
நேர்காணல் குறித்து அறிக்கை பதிவு செய்ய சிஐடயினர் வைத்தியர் பண்டாரவை நாளை காலை வரவழைக்க அழைப்பு விடுத்துள்ளதாக வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைச்சில் முக்கிய பங்கு வகித்த வைத்தியர் ஜெயருவன் பண்டார பின்னர் அவரது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
அதேநேரம், சமுதித்த உடனான உரையாடலின் போது, நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமையை கையாள்வது குறித்து கடுமையாக விமர்சிர்த்திருந்தார். மேலும் பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளின் அதிக விலை நிர்ணயம் குறித்தும் விமர்சித்திருந்தார். (யாழ் நியூஸ்)