இலங்கையில் தற்போதைய கொவிட் பெருந்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாளாந்தம் 95 தொன் எடையுடைய ஒட்சிசன் வாயு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டில் மருத்துவ தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் வாயுவின் மொத்த உச்ச வரம் 78 தொன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தேவைக்காக வாராந்தம் 120 தொன் எடையுடைய ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய நேரிடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் வாயு கையிருப்பு 300 தொன்னாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ தேவைக்கான ஒட்சிசன் வாயு இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுமார் 120,000 லீற்றர் ஒட்சிசன் வாயு இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக மேலும் 36000 லீற்றர் எடையுடைய ஒட்சின் இறக்குமதி செய்ய முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.